POLLING FLAMES

 

தோனியை பற்றி அம்பையரின் கருத்து !

1 year ago 29 ஆகஸ்ட் 2024 07:31 AM | views : 241
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

முன்னதாக பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் காலை தூக்கினாலும் உடனடியாக ஸ்டம்பிங் செய்வதில் தோனி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் திரும்பி பார்க்காமலேயே அதிர்ஷ்டத்துடன் ரன் அவுட் செய்வது, கடைசி நேரத்தில் ஒற்றை கையுறையை கழற்றி விட்டு கீப்பிங் செய்வது போன்ற அவருடைய டெக்னிக் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

அதே போல நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் தோனி வல்லவராக அறியப்படுகிறார். குறிப்பாக நிறைய பரபரப்பான தருணங்களில் கேட்ச், எல்பிடபுள்யூ போன்ற தீர்ப்புகளை அம்பயர்கள் சரியாக கவனிக்காமல் துல்லியமாக வழங்க மாட்டார்கள். ஆனால் விக்கெட் கீப்பராக இருக்கும் தோனி அதை சரியாக கவனித்து அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ எடுப்பார். அதை சோதித்துப் பார்க்கும் போது 90% நேரங்களில் தோனி நினைத்தது போல நடுவர்கள் வழங்கிய தீர்ப்பை மாற்றி வழங்குவார்கள்.

அதனால் “டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம்” எனப்படும் டிஆர்எஸ் விதிமுறையை ரசிகர்கள் “தோனி ரிவ்யூ சிஸ்டம்” என்று பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் ரசிகர்கள் கூறுவது போல தோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பார் என்று இந்தியாவின் பிரபல அம்பயர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் கீப்பருக்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பல நேரங்களில் அவர்களால் பந்தை பார்ப்பது சவாலாக இருக்கும் என்றும் அனில் சவுத்ரி கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் கிட்டத்தட்ட துல்லியத்திற்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை (இடம்) சரியாகப் பார்க்க முடியாது”


“அது வித்தியாசமானது. இருப்பினும் தோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 42 வயதாகும் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் ஏல விதிமுறைகள் வந்த பின் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ரஜினிகாந்த் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION CONGRESS கோவை இந்திய அணி தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் சீமான் கைது பிரதமர் மோடி தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS KEERTHY SURESH INDIAN CRICKET TEAM AJITH NELLAI தீபாவளி THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா சட்டசபை தேர்தல் நெல்லை BIGG BOSS TAMIL RAJINIKANTH ஓபிஎஸ் TAMIL ACTRESS கள்ளக்காதல் ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை அஜித் தேவர் SURIYA கீர்த்தி சுரேஷ் CSK சூர்யா மதுரை வன்னியர் தென்காசி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி