Tamil News & polling
சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலை, ஜெ.ஜெ.தெரு, அம்புஜம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா மேம்பாலத்தின் கீழும், ஆழ்வார்ப்பேட்டை பாலத்துக்கு கீழும் மர்ம நபர் சுற்றித் திரிவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்.
பொதுமக்கள் பிடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி விட்டு பயங்கர சத்தத்துடன் சிரிக்கவும் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மர்ம நபரை நெருங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக நிர்வாண சைக்கோவின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்ப்பேட்டையில் தற்போது வரை விலை உயர்ந்த 35 கார்களை சேதப்படுத்தி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் சுமதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களை நிர்வாண சைக்கோ கற்களால் தாக்கி சேதப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்