POLLING FLAMES

 

கிரிஸ் கெயிலின் மாபெரும் வரலாற்று சாதனையை உடைத்த நிக்கோலஸ் பூரான்!

1 year ago 03 செப்டம்பர் 2024 02:34 AM | views : 216
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் டி20 போட்டிகளில் நிகழ்த்தாத சாதனையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு டி20 கிரிக்கெட்டில் மலை போன்ற ரன்களையும், சதங்களையும் விளாசிள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் டி20 கிரிக்கெட் தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள கிரிஸ் கெயில் ஒரே ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்களை அடித்த வீரராகவும் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் அவர் 135 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிரிஸ் கெயிலின் அந்த இமாலய சாதனையை அதே நாட்டை சேர்ந்த சக வீரரான நிக்கோலஸ் பூரான் முறியடித்து அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரான் கடந்த பல ஆண்டுகளாகவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மதிப்புமிக்க வீரராகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் நிக்கோலஸ் பூரான் ஒட்டுமொத்த டி20 போட்டிகளையும் சேர்த்து தற்போது 139 சிக்ஸர்களை விளாசி கெயிலின் அந்த சாதனையை முறியடித்துள்ளார். எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பூரான் டி20 போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

மிகப் பிரமாண்டமான சிக்சர்களை எளிதாக அடிக்க பெயர் போன பூரான் தற்போது கெயிலின் அந்த சாதனையை முறியடித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.


அதன் காரணமாக அடுத்த ஆண்டு லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக லக்னோ அணியின் புதிய கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION கோவை கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி தமிழ்நாடு கைது சீமான் அமமுக திருமாவளவன் KEERTHY SURESH AJITH INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS தேவர் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை தீபாவளி ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் சூர்யா மதுரை தூத்துக்குடி THIRUMAVALAVAN CSK வன்னியர் SURIYA தென்காசி திருப்பரங்குன்றம்