நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. இந்நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடித் தீர்த்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது. படக்குழு வெளியிட்ட பாடல்களில் மட்ட பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல் சின்ன சின்ன கண்கள் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது.
படத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக படத்தில் ஆங்காங்கே சில காட்சிகளும் பின்னணி இசைகளும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் தோனி, அப்போது இசைக்கப்படும் படையப்பா தீம், அதன் பின்னர் இசைக்கப்படும் மங்காத்தா தீம் என அனைத்துமே ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் க்ளைமேக்ஸில் வரும் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மட்ட பாடலுக்கு த்ரிஷா வந்து நடனமாடியது என அனைத்துமே திரையரங்கில் தீபாவளிதான்.
படத்திற்கு தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கான அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை படல் இடங்களில் முதல் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு படத்திற்கான அனைத்து காட்சிகளுக்கும் பெரும்பான்மையான தியேட்டர்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது.
படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 45 கோடிகள் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 38 கோடியும், மலையாளத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடியும், தெலுங்கில் இரண்டு கோடியும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மொத்தத்தில் படம் முதல் நாளே நல்ல வசூல் குவித்துள்ளதால், ரசிகர்களும் படக்குழுவினரும் கூறியதைப்போல் படம் ரூபாய் 1000 கோடி வசூலை படைத்த முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் இது விஜய் நடிப்பில் வெளியான முந்தையப் படமான லியோவின் முதல் நாள் வசூலை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!