திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்..
ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3), அருகேயுள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவந்தாா்.. திங்கள்கிழமை காலை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்காக ரம்யா தேடியபோது சஞ்சயைக் காணவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகள், தண்ணீா்த் தொட்டிகளில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை..
இதுதொடா்பாக, ரம்யா அளித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸாா் வந்து சிறுவனை வீடுவீடாகத் தேடினா். அப்போது, ரம்யாவுக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த தங்கம்மாளுக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது.. இதையடுத்து, போலீஸாா் தங்கம்மாள் வீட்டில் தேடினா். வாஷிங் மெஷினில் இருந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதற்குள் சஞ்சய் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. தங்கம்மாள் முன்விரோதம் காரணமாக சஞ்சயைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, வாஷிங் மெஷினில் மறைத்து வைத்ததாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், வள்ளியூா் டி.எஸ்.பி. யோகேஷ்குமாா் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.தங்கம்மாளின் மகன் சில மாதங்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில் இறந்ததாகவும், அப்போதிலிருந்து அவா் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்..
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!