மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு காரணம் இதுதான்!

By Admin | Published in செய்திகள் at செப்டம்பர் 16, 2024 திங்கள் || views : 172

மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு காரணம் இதுதான்!

மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு காரணம் இதுதான்!

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி! இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி! இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 5 சீசனை தொடங்கியதிலிருந்தே பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி வந்த நிறுவனம் திடீரென்று இதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து வெங்கடேஷ் பட் வெளியேறினார். இப்படி முக்கியமான நபர்கள் வெளியேறிய நிலையில்தான் இந்த 5வது சீசனை தொடங்கினார்கள். இந்த சீசன் தொடங்கி கொஞ்ச நாட்களிலேயே மக்கள் அனைவரும் நாங்கள் பார்த்து ரசித்த அந்த 4 சீசனை போல் இந்த சீசன் இல்லை என அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீசனில் இருந்து மணிமேகலையும் வெளியேறியுள்ளார். கடந்த 4 சீசன்களில் கோமாளியாக இருந்து மக்களை மகிழ வைத்த மணிமேகலை தற்போது 5வது சீசனில் தொகுப்பாளினியாக ( Anchor) பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்த விஷயம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை மணிமேகலை அவருடைய youtube சேனலில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய வேலையை செய்யவிடாமல் சில இடையூறுகள் இருப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒரு பெண் தொகுப்பாளினி தான் என்று பிரியங்காவை மறைமுகமாக கூறியிருந்தார். மேலும், இந்த சீசன் முழுவதும் அந்தப் பெண் தொகுப்பாளினியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு Cook - ஆக தான் வந்தார், ஆனால் அதை மறந்துவிட்டு என்னுடைய Anchor வேலையை செய்யவிடாமல் இடையூறு செய்து வந்தார். இது பற்றி நான் அவரிடம் நேரடியாகவே பேசினேன். ஆனால் அதை அவர் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை. அதனால் அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் அந்தப் பெண் தொகுப்பாளினி மிகவும் பிரபலமானவர். அதனால் அவரிடம் பகைத்துக் கொள்ளாமல் , அவரிடம் கொஞ்சம் இறங்கி போய் மன்னிப்பு கேட்டால் இன்னும் பல நிகழ்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அவரை பகைத்துக் கொண்டால் உங்களுடைய மீடியா வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறினார்கள் என்று மணிமேகலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிமேகலை அந்த நிறுவனத்திடம் "எனக்கு என்னுடைய சுயமரியாதை தான் முக்கியம், அதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் இறங்கி போவதால் எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் அது எனக்கு தேவையில்லை அதில் வரும் பணமும் எனக்கு தேவையில்லை " என கூறிவிட்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டேன் என மணிமேகலை அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மணிமேகலை பிரியங்கா குக் வித் கோமாளி COOK WITH COMALI MANIMEGALAI PRIYANKA
Whatsaap Channel
விடுகதை :

100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?

விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

prev whatsapp Twitter facebook next