POLLING FLAMES

 

சேவாக்கின் 16 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.!

1 year ago 30 செப்டம்பர் 2024 04:33 PM | views : 223
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக மழையால் 2, 3வது நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் வங்கதேச பவுலர்களை இந்தியா அடித்து நொறுக்கியது. அதனால் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாக இந்தியா உலக சாதனையும் படைத்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய வங்கதேசம் 4வது நாள் முடிவில் 26-2 ரன்கள் எடுத்து இன்னும் இந்தியாவை விட 26 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரோஹித் சர்மாவுடன் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (52) ரன்களை 141 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.

குறிப்பாக 31 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய துவக்க வீரர் என்ற ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சேவாக் 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். ஒட்டுமொத்தமாக ரிஷப் பண்ட் (28), கபில் தேவ் (30) ஆகியோருக்கு பின் 3வது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சர்துள் தாக்கூர் (தலா 31 பந்துகள்) சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.

இது போக 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 1166 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற அஜிங்க்ய ரஹானே சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2019 – 21 தொடரில் ரகானே 1159 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.


மேலும் இப்போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய மற்றும் ஆசிய வீரர் ஆகிய 2 சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில்: 69, நியூசிலாந்துக்கு எதிராக, 2014
2. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 63, வங்கதேசத்துக்கு எதிராக, 2024*
3. முகமத் அஸ்ரபுல்: 57, இந்தியாவுக்கு எதிராக, 2007
4. பென் ஸ்டோக்ஸ்: 57, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2024
5. ரோஹித் சர்மா: 56, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது OPS சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை