சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவருடைய உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
சமீபத்திய தகவலாக இவருடைய அடிவயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டதாகவும் இதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரஜினியின் உடல்நிலை பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேக தகவல் அளித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, "நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அச்சப்படக்கூடிய வகையில் எதுவும் இல்லை.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிதளவில் அறுவைச் சிகிச்சை ஏதும் அவருக்குச் செய்யப்படவில்லை. ரஜினியின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகளும் மருத்துவத் துறை அதிகாரிகளும் தொடர்பிலிருக்கிறார்கள்" என்று தகவல் அளித்திருக்கிறார் மா. சுப்பிரமணியன்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!