POLLING 📊 TN ELECTION 2026

 

உகாண்டாவில் கைது: மகளை காப்பாற்ற போராடும் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் பங்கஜ் ஓஸ்வால்

1 year ago 24 அக்டோபர் 2024 08:06 AM | views : 138
இந்திய வம்சாவளி தொழில் அதிபரான பங்கஜ் ஓஸ்வால் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆப்பிரிக்கா நாடானா உகாண்டாவிலும் தொழில் நடத்தி வருகிறார். அங்குள்ள தொழிற்சாலை நிர்வாகத்தை பார்வையிட தனது மகள் வசுந்தாரா ஓஸ்வாலை அனுப்பி வைத்துள்ளார்.

உகாண்டா போலீஸ் அதிகாரம் மிக்க நாடாக விளங்கி வருகிறது. அவர்கள் எந்தவித நீதிமன்ற ஆணை இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் பிடித்து சிறையில் அடைக்கும் அதிகாரம் பெற்றவர்களாக விளங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் நபர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டு எனக் கூறி வசுந்தாரா ஓஸ்வாலை போலீஸ் அதிகாரிகள் கடந்த 1-ந்தேதி கைது செய்துள்ளனர்.

வசுந்தாரா கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் தான்சானியாவில் உயிருடன் இருக்கிறார். வசுந்தாரா மீது பொய் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இப்படி கடுமையான ஒரு நாட்டிற்கு தனது மகளை அனுப்பி வைத்ததற்காக, பங்கஜ் ஓஸ்வால் மிகவும் வருந்துவதாகவும், மிகவும் குற்ற உணர்ச்சியாக உணர்ந்து தன்னைத்தானே ஒரு ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு வசுந்தராவின் இளைய சகோதரி ரித்தி ஓஸ்வால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரித்தி ஓஸ்வால் கூறியதாவது:-

வசுந்தாரா ஓஸ்வால் குடும்ப தொழிற்சாலை வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உகாண்டா சென்றார். கடந்த 1-ந்தேதி தொழிற்சாலைக்கு சென்றபோது, கேள்வி கேட்க வேண்டும் என சாக்குப்போக்கு சொல்லி ஆயுதம் ஏந்தியவர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

அதில் இருந்து மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மனிதாபிமானமற்ற நிலையில் உள்ளார். அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். 26 வயதான வசுந்தாரா ஓஸ்வால் வாரன்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசுந்தாராவை உகாண்டாவிற்கு அனுப்பியது பற்றி பெற்றோர்கள் குற்றமாக உணர்கிறார்கள். அவர்கள் உகண்டாவிற்கு செல்ல முடியாத உதவியற்ற நிலை குற்ற உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.

அங்குள்ள அதிகாரிகளால் என்னுடைய பெற்றோர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் உகாண்டா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டால் என்னுடைய சகோதரிக்காக அவர்கள் போராட முடியாத நிலை ஏற்படும்.

இதனால் எனது பெற்றோர் வெளி உலக தொடர்பை துண்டித்துவிட்டு, சகோதரிக்கு உதவ முடியும் என்ற நபர்களிடம் மட்டுமே பேசி வருகிறார்கள். உகாண்டாவில் எனது சகோதரி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்கும்போது பெற்றோர் லண்டனில் இருந்தனர். அப்போது இருந்து ரகசிய இடத்தில் தங்களை தாங்களாகவே சிறைப்பிடித்துள்ளனர். வசுந்தராவின் வழக்குக்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழித்து வருகின்றனர்.

அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவிற்கு மேல் சாப்பிடுவதில்லை, மேலும் தங்கள் மகளை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிற்சாலையை நிர்வகிப்பதற்காக உகாண்டா செல்ல அவரை வற்புறுத்தியதற்காக தங்களை மிகவும் குற்றம் செய்தவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் ஆண் பெண் சமம் என எங்களுக்கு கற்பித்து க்ரீன் பீல்டு திட்டங்களில் பணிபுரிய என்னுடைய சகோதரியை ஊக்குவித்தார்கள்.

அவள் ஒரு பெண் என்பதாலேயே எளிதான ஒன்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, மிகவும் சவாலான பணிகள் ஒதுக்கினார்கள். அவளுடைய தற்போதைய சூழ்நிலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.

இவ்வாறு ரித்தி ஓஸ்வால் தெரிவித்துள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI ADMK டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி கனமழை ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK பாமக காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் கோவை கைது CONGRESS ரஜினிகாந்த் தமிழ்நாடு சீமான் இந்திய அணி கொலை COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM அமமுக AJITH தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி KEERTHY SURESH PARLIAMENT ELECTION ASSEMBLY ELECTIONS EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS நெல்லை NELLAI தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN MADURAI மதுரை விடுமுறை PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் அஜித் CSK ஓபிஎஸ் SEEMAN தூத்துக்குடி பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் வன்னியர் ELECTION COMMISSION NORTHEAST MONSOON கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல்