எனக்கு வாய்ப்பளித்த ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றி..

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at அக்டோபர் 24, 2024 வியாழன் || views : 164

எனக்கு வாய்ப்பளித்த ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றி..

எனக்கு வாய்ப்பளித்த ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றி..

இந்தியா – நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் அக்டோபர் 24ஆம் தேதி துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் தொடரை வெல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களம் இறங்கிய அந்த அணிக்கு டேவோன் கான்வே 86, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 201-4 என்ற வலுவான நிலையில் இருந்த அந்த அணியை பின்னர் அபாரமாக பந்து வீசிய இந்தியா 259 ரன்களுக்கு சுருட்டியது. இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாளில் 16-1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா டக் அவுட்டான இந்தியாவுக்கு களத்தில் ஜெயஸ்வால் 6*, கில் 10* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் தேர்வாகாத வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது போட்டியில் தேர்வாகி விளையாடும் வாய்ப்பு பெற்றார். அதனால் 45 மாதங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகள் எடுத்து நியூசிலாந்தை சுருட்ட முக்கிய பங்காற்றினர்.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்த சுந்தர் தன்னுடைய தேர்வு பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தமக்கு வாய்ப்பளித்த பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ரோகித்துக்கு நன்றி தெரிவித்த சுந்தர் இப்போட்டியில் பந்து வீசிய திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் டெஸ்ட் போட்டியில் நான் அங்கமாக கூட இல்லை”

“இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு நேரடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ரோகித் பாய் மற்றும் கௌதம் பாய்க்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது நம்ப முடியாத உணர்வு. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அல்லது எந்த பேட்ஸ்மேன் வந்தாலும் நான் துல்லியமாக பந்து வீச விரும்பினேன்”

“இது கடவுளின் திட்டம். குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் கவனத்துடன் அடித்து பந்து வீசிய நான் வேகத்தை அங்கேயும் எங்கேயும் மாற்றினேன். அது வேலை செய்ததற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். பிட்ச் முதல் நாளிலிருந்தே சுழல துவங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். இருப்பினும் முதல் செசனை போல 2வது செஷனில் சுழலவில்லை. 3வது செஷனில் செட்டிலானது. ரச்சின் ரவீந்திரா சிறப்பாக பேட்டிங் செய்த போது அவருடைய விக்கெட்டை எடுத்ததும் மிட்செல் விக்கெட்டும் பிடித்தது” என்று கூறினார்.

GAUTAM GAMBHIR IND VS NZ INDIAN CRICKET TEAM ROHIT SHARMA WASHINGTON SUNDAR இந்திய அணி நியூசிலாந்து ரோஹித் சர்மா வாஷிங்டன் சுந்தர்
Whatsaap Channel
விடுகதை :

எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

விடுகதை :

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next