ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். பல வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. படிச்சுருக்கிறீங்க. இன்னைக்கு நாலு பேர் செத்துப் போனான், இரண்டு பேர் செத்துப்போனான். அதுக்கு ஒரு பெரிய இது பண்றான். ஆனால், சுதந்திரத்திற்காக இந்த சமுதாயம் 5 ஆயிரம் - 10 ஆயிரம் பேர் செத்து இருக்காங்கன்றதை நீங்கள் வரலாறை புரட்டி பார்க்க வேண்டும்.
அது வருகிற போது அந்த வரலாறைகளை எல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் நான் தெளிவுபடுத்துகிறேன். ஏன்னு சொன்னீங்கன்னா, இன்றைக்கு ஒரு வரலாறு இருக்கு. அது அழகர்கோவிலாக இருந்தாலும் திருமோகூர் கோவிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களுடைய பெரிய படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லுகிற போது, இந்த சமுதாயம் தான் முன்னுக்கு நின்று ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறான்.
இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல உசிலம்பட்டி பக்கத்துல 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாங்கனு சொன்னால் கூட. இதற்கு எல்லாம் விவசாயத்துறையில் தொழில்துறையில் நம்மவர்கள் முன்னுக்கு இருந்தாலும் கூட படிப்பறிவில் அன்றைக்கு பின்தங்கி இருந்த காரணத்தினால், நம்முடைய வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் நீங்கள் வந்து கொண்டு இருப்பதை மனதார பாராட்டுகிறேன்" என்று அவர் கூறினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!