இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பில் சால்ட் 26 ரன்களில் அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய பென் டக்கெட் 65 (56) ரன்கள் விளாசி அசத்தினார். மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நேர்த்தியாக விளையாடி அரை சதத்தை அடித்து 69 ரன்கள் எடுத்தார். அதே போல ஹரி ப்ரூக் 31, கேப்டன் ஜோஸ் பட்லர் 34, லியம் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் குவித்தர்கள். இறுதியில் அடில் ரசித் 14 ரன்கள் எடுத்த போதிலும் 49.5 ஓவரில் இங்கிலாந்து 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 305 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி அசத்தினார்கள். நேரம் செல்ல செல்ல இருவருமே அரை சதமடித்து 136 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போது கில் 60 (52) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அடுத்ததாக வந்த விராட் கோலி 5 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பட்டாசாக விளையாடிய ரோஹித் சர்மா 32வது ஒருநாள் சதத்தை அடித்து மிரட்டினார். தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் ஓய்வு பெறுமாறு விமர்சனங்களை சந்தித்த அவர் தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் ஃபார்முக்கு திரும்பினார். 37 வயதில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 119 (90) ரன்களை அடித்த அவர் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் உலக சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ஷாஹித் அப்ரிடி: 351
2. ரோஹித் சர்மா: 338*
3. கிறிஸ் கெயில்: 331
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 44, பாண்டியா 10, ராகுல் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் மறுபுறம் நன்றாக விளையாடிய அக்சர் படேல் 41, ஜடேஜா 11* ரன்கள் எடுத்தனர். அதனால் 44.3 ஓவரில் 308-6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜெமி ஓவர்டன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!