கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை அடித்து 119, சுப்மன் கில் 60, ஸ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 44.3 ஓவரில் 308-6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரையும் வென்றது. இந்த வெற்றிக்கு சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சமீபத்திய போட்டிகளில் சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமான அவரை ஓய்வு பெறுமாறு நிறைய ரசிகர்கள் விமர்சித்தார்கள். இருப்பினும் மனம் தளராத ரோகித் தமக்கு பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் சதத்தை அடித்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக ரோஹித் சர்மா 15350 ரன்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் அடித்த இந்திய துவக்க வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விரேந்தர் சேவாக்: 16119
2. ரோஹித் சர்மா: 15350*
3. சச்சின் டெண்டுல்கர்: 15335
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3வது அதிக சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையையும் ரோஹித் உடைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 48 சதங்கள் அடித்த நிலையில் ரோகித் 49 சதங்கள் அடித்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் சச்சின் டெண்டுல்கர் 100, விராட் கோலி 81 சதங்களுடன் உள்ளார்கள்.
இது போக சர்வதேச கிரிக்கெட்டில் 30 வயதிற்கு பின் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையையும் அவர் உடைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 36
2. சச்சின் டெண்டுல்கர்: 35
3. ராகுல் டிராவிட்
ஒருநாள் கிரிக்கெட்டில் 30 வயதுக்கு பின் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 22*
2. சனாத் ஜெயசூர்யா/டி தில்சன்: தலா 21
3. குமார் சங்கக்காரா: 19
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!