சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் த.வெ.க. தலைவர் விஜய் முதலில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேனரில் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
அதன்பின் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்திட கேட்கப்பட்டது. ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். முன்னதாக, அந்தக் கையெழுத்து இயக்கம் குறித்து பிரசாந்த் கிஷோருக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அதன் பின்னும் ஆனந்த் கையெழுத்திட கேட்டும் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.
அந்த பேனரில் பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை, விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம், ஆடம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடைமாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற நிர்வாகம், சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பது, ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்க்கை வளச் சுரண்டபடுகின்றன என்று விமர்சிக்கப்பட்டு இருந்தது.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!