INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

ஜூலை 25, 2024 | 03:11 am 2 days ago
திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

ஜூலை 22, 2024 | 03:40 am 5 days ago
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய, பாட்டாளி மக்கள்

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

ஜூலை 22, 2024 | 01:51 am 5 days ago
நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும், இந்த அரசும் அப்படிதான்

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

ஜூலை 22, 2024 | 01:48 am 5 days ago
அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார். மீண்டும் அதிபர் தேர்தலில்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜூலை 16, 2024 | 11:19 am 1 week ago
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டு

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

ஜூலை 16, 2024 | 09:44 am 1 week ago
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

ஜூலை 16, 2024 | 08:52 am 1 week ago
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஜூலை 16, 2024 | 08:00 am 1 week ago
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ஜூலை 16, 2024 | 05:39 am 1 week ago
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப்

சண்டாளர் என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்

ஜூலை 15, 2024 | 04:53 pm 1 week ago
சண்டாளர் என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

ஜூலை 15, 2024 | 06:40 am 1 week ago
குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் பெருமையையும் புகழையும் போற்றிக் கொண்டாடுவோம்... டிடிவி தினகரன்

ஜூலை 15, 2024 | 04:22 am 1 week ago
காமராஜரின் பெருமையையும் புகழையும் போற்றிக் கொண்டாடுவோம்... டிடிவி தினகரன்

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ளே வரும் சிபிஐ!! அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார்!

ஜூலை 14, 2024 | 05:32 pm 1 week ago
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ளே வரும் சிபிஐ!! அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார்!

கடந்த 2019 ம் ஆண்டு சிறு குறு விவசாயிகள் நலனுக்காக பி எம் கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார். தமிழகத்தில் அதிகபட்சமாக 43 லட்சம் விவசாயிகள் வரை அந்தத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்தனர். இதுவரை 17 தவணை ரூ 2,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படிப்படியாக குறைந்து இந்தத் திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு நேர்மையாக விசாரணை செய்ய வேண்டும் : டிடிவி தினரகன்

ஜூலை 14, 2024 | 05:23 pm 1 week ago
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு நேர்மையாக விசாரணை செய்ய வேண்டும் : டிடிவி தினரகன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர் சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஜூலை 14, 2024 | 03:19 am 1 week ago
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

சென்னை மாதவரத்தில் அதிகாலையிலேயே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற நேரத்தில் ரவுடி ஒருவர்

காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 14, 2024 | 03:10 am 1 week ago
காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர்

தமிழகம் முழுவதும் ஜூலை 13, 2024 பள்ளிகளுக்கு விடுமுறை

ஜூலை 12, 2024 | 04:54 pm 2 weeks ago
தமிழகம் முழுவதும் ஜூலை 13, 2024  பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை (ஜூலை 13) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில்

அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய சூப்பர்ஸ்டார் ரஜினி.. படுவைரல் வீடியோ

ஜூலை 12, 2024 | 04:44 pm 2 weeks ago
அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய சூப்பர்ஸ்டார் ரஜினி.. படுவைரல் வீடியோ

ரஜினிகாந்த் இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் கேரியரின் உச்சத்தில் இருந்த காலத்தில் பல ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு பாலிவுட் ஹீரோக்களே கூட பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனந்த் அம்பானி திருமணத்தில் உலக அளவில் பாப்புலர் ஆன பிரபலங்கள் பலரும் வந்திருக்குக் நிலையில் நடிகர் ரஜினியும் குடும்பத்துடன் கலந்துகொண்டு இருக்கிறார்.

சீமான் தனது நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்- கீதா ஜீவன்

ஜூலை 12, 2024 | 11:44 am 2 weeks ago
சீமான் தனது நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்- கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின் பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தலைவர் கலைஞர் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்.தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். இளைஞர்களுக்காக முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவு தேர்வு ரத்து,

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஜூலை 11, 2024 | 12:22 pm 2 weeks ago
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன். சாட்டை என்ற

ஆம்ஸ்ட்ராங் படுகொலை உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்!

ஜூலை 06, 2024 | 07:05 am 3 weeks ago
ஆம்ஸ்ட்ராங் படுகொலை உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்!

சென்னை,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8

Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.