INDIAN 7

Tamil News & polling

தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது

12 நவம்பர் 2025 03:29 PM | views : 297
Nature

சென்னை,

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் சமீபத்தில் ‘தீபாவளி சீட்டு’ என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி ஏராளமானோர் சீட்டுப் பணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில், சத்தியசீலன்-சித்ரா தம்பதி, தாங்கள் சொன்னபடி தங்க காசு தராமல் ரூ.8 கோடி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சத்தியசீலன்-சித்ரா தம்பதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற

Image வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள்

Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு

Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image சென்னை, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்