POLLING 📊 TN ELECTION 2026

 

கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

4 months ago 14 நவம்பர் 2025 02:50 AM | views : 223
கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய தம்பி கார்த்தி என்ற காளீஸ்வரன் (20), தவசி (20) ஆகியோர் காதலனை அரிவாளால் வெட்டி, மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காலில் படுகாயம் அடைந்த அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டுக்காயம் அடைந்த அவருடைய காதலனும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் குணமடைந்தனர்.

இதையடுத்து கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலன் ஆகியோர் தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். அதுபோன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சதீஸ் ஆகியோர் குணமடைந்ததால் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்தி என்ற காளீஸ்வரனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவி, அவருடைய காதலனுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கார்த்திக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்போம். இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரித்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI ADMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் கனமழை PMK உதயநிதி ஸ்டாலின் பாமக AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் தமிழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் கோவை சட்டசபை தேர்தல் கைது CONGRESS ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM இந்திய அணி UDHAYANIDHI STALIN COIMBATORE கொலை சீமான் திருமாவளவன் தமிழ்நாடு தென்காசி அமமுக பிரதமர் மோடி KEERTHY SURESH AJITH தீபாவளி வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION TAMIL ACTRESS நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM OPS NELLAI EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS தேவர் SEEMAN கள்ளக்காதல் வன்னியர் பாலியல் தொல்லை PRIME MINISTER MODI ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் MADURAI NORTHEAST MONSOON அஜித் தூத்துக்குடி மதுரை கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION CSK BIGG BOSS TAMIL