INDIAN 7

Tamil News & polling

குழந்தைகள் தினம்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

14 நவம்பர் 2025 04:31 AM | views : 198
Nature

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குழந்தைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் குழந்தைகளின் மகிழ்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீறிய முயற்சியால் குழந்தைச் செல்வங்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான், செல்ல மகளை செல்வ மகள்களாக மாற்றும், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான வருங்கால வைப்புநிதி திட்டம். நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், நாட்டின் வருங்காலமான குழந்தைகளின் நலனுக்காகவும் பாரதப் பிரதமர் பாடுபட்டு வருகிறார்.

நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம்.

குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எனது இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினம்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்