INDIAN 7

Tamil News & polling

திறமையான சுந்தரை இப்படி வீணடிக்காதீங்க.... கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்

19 நவம்பர் 2025 05:22 AM | views : 195
Nature

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி 3வது இடத்தில் சாய் சுதர்சனை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் திடீரென ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததும் தோல்விக்கு காரணமானதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அதே சமயம் முதல் முறையாக 3வது இடத்தில் விளையாடிய சுந்தர் கடினமான கொல்கத்தா பிட்ச்சில் 2 இன்னிங்ஸிலும் 50+ பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் அசத்தக்கூடிய திறமையான வீரர் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் 3வது இடத்திற்கு பொருந்த மாட்டார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே அவருடைய திறமையை வீணடிக்காமல் கௌதம் கம்பீர் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் இந்திய மண்ணில் விளையாடும் போது 4 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்றும் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தருக்கு இது சிறப்பான நேரமாகும்”

“நல்ல கிரிக்கெட்டரான அவர் நன்றாக பேட்டிங், பவுலிங் செய்யக்கூடியவர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலத் திட்டத்தில் அனைத்து சூழ்நிலைகளுக்கும் அவர் 3வது இடத்தில் கச்சிதமாக பொருந்துவாரா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. உங்களுடைய ஓப்பனர்கள் உட்பட டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் வீரர்களாக இருக்க வேண்டும்”

“அது போன்ற சூழ்நிலையில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாசிங்டன் சுந்தர் இந்தியாவுக்காக 3வது இடத்தில் அசத்துவார் என்பதில் என்னால் சமாதானமாக முடியவில்லை. எனவே இந்த விஷயத்தை கௌதம் கம்பீர் கவனிக்க வேண்டும். அதே போல இந்தியாவில் அவருக்கு 4 ஸ்பின்னர்கள் தேவையில்லை”


“குறிப்பாக கொல்கத்தா போட்டியில் வாஷிங்டன் வெறும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் போது உங்களுடைய முதன்மை ஸ்பின்னர்கள் 20 – 30 ஓவர்களைப் போட்டு தேவையான விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்கள். அதைச் செய்ய உங்களுக்கு 4 ஸ்பின்னர்கள் தேவையில்லை. எனவே இவை அனைத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்