INDIAN 7

Tamil News & polling

பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? மு.க.ஸ்டாலின் கண்டனம்

20 நவம்பர் 2025 05:18 AM | views : 186
Nature

சென்னை ,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!

கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார் .

பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? மு.க.ஸ்டாலின் கண்டனம்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Image புதுடெல்லி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில்

Image சென்னை, சென்னை, பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்

Image கோவை: மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில்

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

Image சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்