INDIAN 7

Tamil News & polling

சிக்கன் 65 பெயர் வந்தது எப்படி தெரியுமா..? - ருசிகர தகவல்

21 நவம்பர் 2025 07:21 AM | views : 183
Nature

அசைவ உணவு பிரியர்கள் ருசிக்கும் பட்டியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் 'சைடு டிஷ்' சிக்கன் 65. ஆனால், மசாலாவில் ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்த சிக்கனுக்கு எப்படி சிக்கன் 65 என்று பெயர் வந்தது? என்பது இன்றுவரை நிறைய பேருக்கு தெரியாது. ஏன், அதை விரும்பி ருசிக்கும் பலரும் அதை அறியாமல்தான் உள்ளனர்.

2003-ம் ஆண்டு சரத்குமார் - வடிவேலு நடிப்பில் வெளியான 'திவான்' படத்தில் கூட, சிக்கன் 65-ஐ வைத்து ஒரு காமெடி காட்சியே வரும். ஹோட்டலுக்கு சாப்பிட வரும் முத்துகாளை, சிக்கன் 65 ஆர்டர் செய்வார். வடிவேலு அதை கொண்டுவந்து கொடுப்பார். சிக்கன் துண்டுகளை எண்ணிப் பார்க்கும் முத்துகாளை. 5 துண்டுகள் தான் இருக்கிறது. மீதமுள்ள 60 துண்டுகள் எங்கே? என்று கேள்வி கேட்பார். வடிவேலுவும் சமாளிக்க முடியாமல் திணறுவார்.

இந்த காமெடி காட்சியை பார்ப்பவர்களுக்கு கூட, "ஆமா அது சரிதானே, சிக்கன் 65 என்ற பெயர் எப்படி வந்தது? என கேள்வி எழும்.



ஆனால், இந்த கேள்விக்கு பதிலாக, 65 நாட்கள் வளர்ந்த கோழியில் இருந்து சிக்கன் 65 தயாரிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால், இது தவறு. அப்படி என்றால், சிக்கன் 65 என்ற பெயர் எப்படித்தான் வந்தது? என்று தலையை பிய்த்துக்கொள்ளலாம்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல அசைவ ஹோட்டல் இந்த கேள்விக்கு விளக்கம் தருகிறது. அந்த ஹோட்டலில் 1965-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று வாடிக்கையாளர்களுக்கு மசாலாவில் ஊறவைக்கப்பட்ட பொறித்த கோழிக்கறி துண்டுகள் பரிமாறப்பட்டு உள்ளது. அதை சுவைத்த வாடிக்கையாளர் ஒருவர், "இதற்கு பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஹோட்டல் முதலாளி, 'சிக்கன் 65' என்று, புத்தாண்டை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அன்று முதல் மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை 'சிக்கன் 65' என்று கூறுகிறோம்.

சிக்கன் 65 பெயர் வந்தது எப்படி தெரியுமா..? - ருசிகர தகவல்1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்