POLLING 📊 TN ELECTION 2026

 

விஜய்ய பாக்க ஆசையா? நாளைக்கு பாக்கலாம்! 2 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அனுமதி 😮

4 months ago 22 நவம்பர் 2025 05:03 AM | views : 227
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். குறிப்பாக இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர். இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN கனமழை உதயநிதி ஸ்டாலின் AIADMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் கைது கோவை சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழ்நாடு திருமாவளவன் INDIAN CRICKET TEAM COIMBATORE கொலை சீமான் பிரதமர் மோடி அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH AJITH PARLIAMENT ELECTION தீபாவளி தென்காசி EDAPPADI PALANISWAMI NELLAI OPS ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS நெல்லை தேவர் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை SEEMAN கள்ளக்காதல் அஜித் ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை தமிழக சட்டசபை தேர்தல் MADURAI வன்னியர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION PRIME MINISTER MODI CSK திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை