INDIAN 7

Tamil News & polling

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

23 டிசம்பர் 2025 03:53 AM | views : 18
Nature

திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டு கழகம் சார்​பில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்​களை கைது செய்த போலீசார் வாக​னத்​தில் ஏற்றி கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்​டனர். இதையடுத்​து, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் செவிலியர்​கள்போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதைத்​தொடர்ந்து அவர்களைக் கைது செய்​து, ஊரப்​பாக்​கத்​தில் உள்ள திருமண மண்​டபத்தில் போலீ​ஸார் அடைத்தனர். அங்​கும் செவிலியர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர். செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதை கண்​டித்​து, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைகள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் நேற்று செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 723 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இருப்பினும் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும்,

Image சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய

Image தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக

Image சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

Image சென்னை, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு

Image சென்னை, சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்