INDIAN 7

Tamil News & polling

மேட்டூர் அணை நீர்மட்டம் 109.72 அடியாக குறைந்தது

23 டிசம்பர் 2025 05:20 AM | views : 14
Nature

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 78.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்