Tamil News & polling
சென்னை,
பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு எப்படி நடக்கும் என இலக்கணங்கள் இருக்கின்றன. பொதுக்குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்காக செயற்குழுவில் அது குறித்து விவாதிப்பார்கள். விவாதித்த பின்னர் செயற்குழுவில் இருந்து பொதுக்குழுவிற்கு கொண்டு வருவார்கள். இது தான் நடைமுறை.
அதிலும் செயற்குழு என்பது சில நேரங்களில் ஒரு அரங்கில் நடைபெறும். பொதுக்குழு என்பது வேறு அரங்கில் நடைபெரும். அதனை தலைவர்கள் மட்டும் நடத்துவாரகள். விவாதித்து முடிவு எடுப்பார்கள்.
இந்தியாவில் முதல் முறையாக செயற்குழுவும், பொதுக்குழுவும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடத்திய ஒரு கேலி கூத்து சேலத்தில் நடந்திருக்கிறது. அவர்கள் சொன்னது இதனை பாமக பொதுக்குழு என்று சொன்னார்கள். இன்று நடைபெற்றது பாமகவின் பொதுக்குழு அல்ல. பொதுக்குழு கட்சியின் செயலாளர், தலைவரால் கூட்டப்பட வேண்டும். அப்படியும் இது கூட்டப்பட வில்லை. இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாமக கட்சியினை கட்டுப்படுத்தாது. எனவே இது பொதுக்குழு அல்ல.
முதலில் 10.04.2025-ல் ராமதாஸ் தன்னை தானே தலைவர் என்று அறிவித்தார். பின்னர் 29.05.2025 ம் தேதி தலைமை நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக அறிவித்ததாக அறிவிப்பு வெளியானதாக தகவல் வெளியானது. ஆனால் இது வரை அப்படி ஒரு நிர்வாக குழு நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை. 08.07.2025ல் செயற்குழு நடைபெற்றது. அதில் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதாக சொன்னார்கள். 17.08.2025ல் சங்கமித்திராவில் பொதுக்குழு நடத்தினர். அதனுடைய முடிவுகளை டெல்லிக்கு அனுப்பினார். அதனை டெல்லி நிராகரித்தது.
அதற்கு முன்னர் 9.08.2025 அன்று மகாபலிபுரத்தில் நாங்கள் நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அன்புமணியின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ம் தேதி வரை நீட்டித்து ஒரு உத்தரவு கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார்கள்.
அதற்கு பிறகு ராமதாஸ் தரப்பில் நிறைய கடிதம் கொடுத்ததாக சொல்கிறார். அன்புமணிதான் தலைவராக இருக்கிறார் என்கிற சான்றுகள் எங்களிடம் உள்ளது. வேறு பதிவுகள் எங்களிடம் இல்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று தான் டெல்லி சொன்னது.
இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai TVK திமுக தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக தமிழக வெற்றிக் கழகம் கனமழை திருமாவளவன் Tamil Nadu BJP எடப்பாடி பழனிசாமி MK Stalin TTV Dhinakaran AIADMK ADMK தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் Thirumavalavan சீமான் செங்கோட்டையன் Sengottaiyan அன்புமணி ராமதாஸ் AMMK வடகிழக்கு பருவமழை Seeman முக ஸ்டாலின் PMK Anbumani Ramadoss டிடிவி தினகரன் Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Edappadi Palaniswami VCK பாமக