உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி
3 months ago
30 டிசம்பர் 2025 07:48 AM | views : 257
டேராடூன்,
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசின் பகுதியில், பஸ் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. நைனிடால் பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் சுமார் 18 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.