INDIAN 7

Tamil News & polling

புத்தாண்டு விடுமுறையையொட்டி மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்

01 ஜனவரி 2026 12:29 PM | views : 13
Nature

புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை 4 மணி முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக் காடசியளிக்கிறது. நேற்று மாலை முதல் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆனால், இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடலூரில் வெள்ளி கடற்கரையிலும் மக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் அலைமோதுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image சென்னை, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு

Image கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மங்களூரு, ஈரோடு - நாகர்கோவில், செந்திராபாத் - வேளாங்கண்ணி, பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக

Image சென்னை, டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்