POLLING 📊 TN ELECTION 2026

 

எம்.ஜி.ஆர் பெயர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பெற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

3 months ago 02 ஜனவரி 2026 02:32 PM | views : 245
சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும்.

எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கைது ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் திருமாவளவன் இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி AJITH தென்காசி தீபாவளி KEERTHY SURESH நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI PARLIAMENT ELECTION TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் THIRUMAVALAVAN OPS EDAPPADI PALANISWAMI திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON SEEMAN அஜித் PRIME MINISTER MODI MADURAI பாலியல் தொல்லை CSK தமிழக சட்டசபை தேர்தல் மதுரை ஓபிஎஸ் வன்னியர் கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION