INDIAN 7

Tamil News & polling

சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின் போது நடந்தது என்ன?

03 ஜனவரி 2026 12:57 AM | views : 29
Nature

சுசீந்தரம் கோவிலில் நடந்ததது என்ன?
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துரத்தப்பட்டது ஏன்...?

சுசீந்திரம் தேரோட்டம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது குமரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து ஹிந்து சமுதாய மக்களும் ஒன்றாக சேர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்....

குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்து விடுவார்கள்.

இன்றும் 02.01.2026 அதேபோல் சுசீந்திரத்தில் தேரோட்டம் துவக்க விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு & மனோ தங்கராஜ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் இந்து இயக்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

குமரி மாவட்டத்தை பொருத்தவரை தேரோட்டம் நடைபெறும் பொழுது இந்து இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களும் ஊர் இளைஞர்களும் இணைந்து தேர் வடம் பிடித்து இழுப்பது வழக்கம்....

அப்படி தேர் இழுக்கும் சமயத்தில் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் கோஷத்துடன் " பாரத் மாதா கி ஜே!"
" ஓம் காளி ஜெய் காளி' என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டுதான் தேரை முழு பலத்துடன் சக்தி கொண்டு அனைவரும் இழுப்பார்கள்.

அதேபோல் இந்த வருடமும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அறங்காவல் துறை அமைச்சர் சேகர்பாபு சரியானநேரத்திர்க்குவராமல் தாமதமாக வந்தார்...

உரிய நேரத்துக்கு வரவும் இல்லை என்ற கோபம் பொதுமக்களிடம் இருந்தது...

இருப்பினும் மக்கள் வழக்கம் போல் "பாரத் மாதா கி ஜே " "ஓம் காளி ஜெய் காளி" என்று கோஷம் போட்டார்கள்...

அப்போது அமைச்சர் சேக்கர்பாபு ஓம் காளி ஜெய் காளி என்றெல்லாம் சொல்லக்கூடாது ..
பக்தி கோஷங்கள் போட வேண்டும் என்று சொன்னார்..

உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் கூட்டம் " திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா"
" தாணு மாலைய சாமிக்கு ஜெய்!" என்று பக்தி கோஷம் போட்டார்கள். திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா என்று சொன்னவுடன் மிகவும் கடுப்பான அமைச்சர் சேகர்பாபு தகாத வார்த்தைகளால் பக்தர்களை பார்த்து நீங்கள் எல்லாம் சோறு தின்கிறீர்களா அல்லது மலத்தை தின்கிறீர்களா என்று அருவருக்கத்தக்க வகையில் எல்லோரையும் திட்ட ஆரம்பித்தார் ...

உடனடியாக பொதுமக்களும் பக்தர்களும் எதிர்க் குரல் கொடுத்தனர் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத அல்லோலியா சேகர் பாபுவே ! கோயிலை விட்டு வெளியே போ என்று கோஷம் போட்டு விரட்டி அடித்தார்கள்....

உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அமைச்சரையும் அவருடன் வந்திருந்த கட்சிக்காரர்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்

இதனால் குமரி மாவட்ட பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தேர் திருவிழா கலகலப்பாகவே முடிந்தது ..

ஒன்று உண்மை மட்டும் புலப்படுகிறது 1982 ஆம் ஆண்டு இந்து எழுச்சி எப்படி குமரி மாவட்டத்தில் ஏற்பட்டதோ அதேபோன்ற ஒரு எழுச்சி மீண்டும் ஒரு உருவாகிக்கொண்டிருக்கிறது என்று புலப்படுகிறது.

குமரி மாவட்ட இந்துக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள் இதுவே உண்மை ...
மாண்புமிகு அமைச்சர் மாண்பே இல்லாமல் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது....

நாஞ்சில்ராஜா
விசுவ ஹிந்து பரிஷத்

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்