POLLING 📊 TN ELECTION 2026

 

தமிழகம் வரும் மோடி; கூட்டணி இறுதி செய்ய பாஜக முயற்சி

3 months ago 07 ஜனவரி 2026 08:53 AM | views : 244
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமித்ஷா திருச்சி வந்து சென்றார். அப்போது பொங்கலுக்கு முன்பாக அதிமுக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளை முடிக்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணியிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற பாமக தலைவர் அன்புமணி தரப்பு, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பயணத்தின் போது அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் இருவரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். இந்த மாத இறுதிக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளாராம். அனேகமாக, 28-ந் தேதி அவர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்து கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கூட்டணியை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக ADMK AMMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை உதயநிதி ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் பாமக AIADMK CONGRESS காங்கிரஸ் தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கைது UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கோவை PARLIAMENT ELECTION தமிழ்நாடு COIMBATORE கொலை சீமான் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM இந்திய அணி KEERTHY SURESH பிரதமர் மோடி தீபாவளி வடகிழக்கு பருவமழை AJITH அமமுக தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM OPS THIRUMAVALAVAN நெல்லை TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS தென்காசி அஜித் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் NORTHEAST MONSOON ஓபிஎஸ் மதுரை பாலியல் தொல்லை விடுமுறை SEEMAN NELLAI வன்னியர் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் CSK ELECTION COMMISSION MADURAI