POLLING 📊 TN ELECTION 2026

 

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்

1 hour ago 08 ஏப்ரல் 2026 09:52 AM | views : 46

இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச் சந்திக்கிறார். பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவும் இருப்பதால் எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில், பரப்புரைக்காக விஜய்யைப் போன்று வேடமிட்ட டூப் ஒருவரை வைத்து கொளத்தூர் தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்ட காணொலி இணையத்தில் வைரலானது.


இதனைக் கண்ட இயக்குநரும் நடிகருமான சேரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ”ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல். இந்த பரப்புரை நிலை சரிதானா? இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா? அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு. நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்.


நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரசாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே? முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே?.சிந்தியுங்கள் மக்களே.


நீங்கள், யார் வேண்டுமா வேண்டாமா எனக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் இந்த வயதில் இறங்கி நடந்து பிரசாரம் செய்கிறார். ஆனால், நீங்கள் ஒரு மணி நேரம்தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போ சொல்லுங்க மக்களே.


நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே? எனக் கூறியுள்ளார். இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் சேரனைத் தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.



பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN TAMIL NADU AIADMK மு.க.ஸ்டாலின் கனமழை ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் MK STALIN காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் CONGRESS அன்புமணி ராமதாஸ் தமிழகம் கோவை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கைது சட்டசபை தேர்தல் சீமான் திருமாவளவன் கொலை COIMBATORE INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION இந்திய அணி AJITH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு தீபாவளி அமமுக தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM OPS THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS தேவர் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் வன்னியர் திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் SEEMAN PRIME MINISTER MODI அஜித் தமிழக சட்டசபை தேர்தல் NELLAI விடுமுறை தூத்துக்குடி பாலியல் தொல்லை மதுரை MADURAI ELECTION COMMISSION NORTHEAST MONSOON CSK கீர்த்தி சுரேஷ்