POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

குமரி மாவட்டத்திற்கு 12-ந்தேதி விஜய் வருகை; 6 மணி நேரம் பிரசாரத்திற்கு அனுமதி

1 hour ago 10 ஏப்ரல் 2026 03:47 PM | views : 14

தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாக சென்று அவர் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விஜய் அவர்கள் வருகிற நாளை மறுநாள் (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.


பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்திருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்தை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.



விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நாளை (11-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க உள்ளனர்.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ADMK ANNAMALAI தவெக AMMK எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN PMK கனமழை மு.க.ஸ்டாலின் பாமக காங்கிரஸ் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் CONGRESS தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் கைது ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION இந்திய அணி தமிழகம் கோவை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN சீமான் அமமுக AJITH UDHAYANIDHI STALIN தமிழ்நாடு கொலை KEERTHY SURESH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை நெல்லை NELLAI ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் தென்காசி OPS TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS SURIYA அஜித் வன்னியர் தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் NORTHEAST MONSOON பாலியல் தொல்லை மதுரை MADURAI CSK கொரோனா BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI கள்ளக்காதல் தேவர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION