POLLING FLAMES 📊 TN ELECTION 2026
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக "ஜன நாயகன்" உருவாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது படக்குழு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சூரி ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தே.ஜ. கூட்டணி ஆட்சியால் மட்டுமே...அடுத்த செய்தி (Next) »
கன்னியாகுமரியில் மீனவர்களுக்காக விஜய் அளித்த ...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: