ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

கோவை: ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில் ஆனந்த் ஆகியோரை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து செங்கோட்டையன் கலந்துரையாடினாா்.



இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டும் ஒரே சக்தி விஜய்திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ளது. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்ந்து வருகிறாா். மக்களும் நமக்கு வாக்களிக்க ஆா்வமாக உள்ளனா்.


தோ்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. ரூ.8 ஆயிரம் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கமாட்டேன் என்று தலைவா் விஜய் உறுதியளித்துள்ளாா்.எல்.முருகன்தான் பொறுப்புஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளாா்கள்.ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன்தான் பொறுப்பு.


அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான்.கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள்தான சொல்ல வேண்டும் என செங்கோட்டையன் கூறினார்.



பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel