POLLING FLAMES

 

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 10 லட்சம் இழந்த என்ஜினியர் தற்கொலை

4 years ago 10 அக்டோபர் 2021 03:57 PM | views : 204
வாணியம்பாடி அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில், 10 லட்சம் ரூபாய் இழந்த ஐ.டி., என்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருேஷாத்தமகுப்பம் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 65. விவசாயி.இவரது மகன் ஆனந்தன், 30. இவர் சென்னை ஐ.டி., நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு நேற்று 9 ம் தேதி ஆனந்தன் வந்தார். காலை 9:00 மணிக்கு ஓட்டு போட்டார். அன்று மாலை பெற்றோர் வெளியே சென்று விட்டு இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டினர்.திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்ததில், ஆனந்தன் ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.


வாணியம்பாடி போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அதில், ஆன்லைன் மூலம் மொபைல் போனில் ரம்மி சூதாட்டத்தை ஆனந்தன் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் 10 லட்சம் ரூபாய் இழந்து விட்டார். சாமி படத்தின் முன்பு சத்தியம்இது குறித்து பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அவரை கண்டித்தனர்.


இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை தங்களிடம் கொடுத்து விட வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடக் கூடாது என சாமி படத்தின் முன்பு சத்தியம் செய்து கொடுக்க செய்தனர்.பின் உறவினரை பார்க்க பெற்றோர் வெளியே சென்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட முடியாமல் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK AMMK TVK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK PMK இந்திய அணி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் முக ஸ்டாலின் COIMBATORE OPS SURIYA தேவர் வன்னியர் NELLAI நெல்லை தமிழ்நாடு கைது சீமான் KEERTHY SURESH பிரதமர் மோடி அமமுக சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சூர்யா AJITH THIRUMAVALAVAN விடுமுறை தென்காசி CSK TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION நடிகை PARLIAMENT ELECTION அன்புமணி அஜித் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் RAJINIKANTH கள்ளக்காதல்