கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By Admin | Published: அக்டோபர் 13, 2021 புதன் || views : 84

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற தங்க நகைகளை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2021) தலைமைச் செயலகத்தில், திருவேற்காடு - அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்றுப் பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின் 2021- 22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாகத் திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்கு நேர்த்திக் கடனாக அளிக்கும் பலமாற்றுப் பொன் இனங்களை இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 1979ஆம் ஆண்டு முதல் கற்கள், அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கம் செய்யப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி நடைமுறையில் உள்ளது.



கடந்த காலங்களில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம்- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உட்பட 9 திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள், மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 497 கிலோ 795 கிராம் தங்கம், முதலீடு செய்யப்பட்டு, அதற்கான வட்டி திருக்கோயில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கடந்த பத்து ஆண்டு காலமாகத் திருக்கோயிலுக்கு வரும் காணிக்கை பொன் இனங்கள் பெருமளவில் சேர்ந்துள்ளன. இவ்வினங்களில் உபயோகப்படுத்த இயலாத நிலையில், உதிரியாக உள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் எவ்விதப் பயன்பாடும் இல்லாத நிலையில் பாதுகாப்பு கருதி, இவற்றை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றுவது அவசியமானது.


இப்பணி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். எனவே, திருக்கோயில் நலன் கருதி, தற்பொழுது திருக்கோயில்களின் தேவை போக உள்ள பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சீரிய முறையில் இப்பணிகளைக் மேற்கொள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முறையே ராஜூ, ஆர்.மாலா மற்றும் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பலமாற்றுப் பொன் இனங்களைக் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். இதன் மூலம் திருக்கோயிலின் நிதியைப் பெருக்குவதுடன், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளுக்குச் சிறந்த பாதுகாப்பாகவும் அமையும். இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை அந்தந்தத் திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். மேலும், அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவன், இறைவி திருவுருவங்களுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறப்பட்டுப் பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DMK
Whatsaap Channel
விடுகதை :

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


விடுகதை :

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


விடுகதை :

உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்குகள் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, "அ.தி.மு.க.

எனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக- கஸ்தூரி

எனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக- கஸ்தூரி

சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேது அவர் கூறியிருபு்பதாவது:- தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தெலுங்கு இனம்,

தேவர் ஜெயந்தி பசும்பொன் வருகை தரும் சசிகலா!

தேவர் ஜெயந்தி பசும்பொன் வருகை தரும் சசிகலா!

மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க. அரசு வந்ததில் இருந்து எங்கும் தூர்வாரவில்லை என்றும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்கள் தி.மு.க.

விஜய் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்!

விஜய் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர்

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை - மு.க.ஸ்டாலின்?

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை - மு.க.ஸ்டாலின்?

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக - தெளிவுபடுத்திய விஜய்

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக - தெளிவுபடுத்திய விஜய்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "பெரியார் எங்கள் கொள்கை தலைவர். இதை சொன்னவுடனே ஒரு கூட்டம் பெயிண்ட்

கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விசிக விற்கு வலை விரித்த விஜய்!

கூட்டணிக்கு  வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விசிக விற்கு வலை விரித்த விஜய்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத்

தேவர் குருபூஜை விழாவையொட்டி 13 கிலோ தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

தேவர் குருபூஜை விழாவையொட்டி 13 கிலோ தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு

வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு - வீடியோ

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு - வீடியோ


அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்


பிரதமர் மோடியுடன் எனது முதல் உரையாடல்: டிரம்ப் நெகிழ்ச்சி

பிரதமர் மோடியுடன் எனது முதல் உரையாடல்: டிரம்ப் நெகிழ்ச்சி


வாகை சூடிய டிரம்ப்.. எவ்வளவு வாக்குகள்?.. எங்கெங்கு வெற்றி? - கமலா கைப்பற்றிய மாகாணங்கள் எவை?

வாகை சூடிய டிரம்ப்.. எவ்வளவு வாக்குகள்?.. எங்கெங்கு வெற்றி? - கமலா கைப்பற்றிய மாகாணங்கள் எவை?


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next