Tamil News & polling
கோயில்கள் - தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது, கரோனா கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே, விஜயதசமி தினத்தன்று கோயில்களைத் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று வழக்கொன்றில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்தும் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அறிவிப்பு செய்துள்ளது. பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக பல்வேறு கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது, பண்டிகை காலத்தை ஒட்டி கரோனா தளர்வுகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிப்பதா அல்லது இப்போதைய நிலையைத் தொடர்வதா என்பன போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கின்றார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
விஜயதசமி தினத்தன்று கோயில்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிவிப்புகளை அதிகாரபூர்வமாக தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK அண்ணாமலை தவெக Annamalai அதிமுக பாஜக கனமழை BJP TTV Dhinakaran தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி ADMK MK Stalin திருமாவளவன் AIADMK அன்புமணி ராமதாஸ் AMMK மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss டிடிவி தினகரன் சீமான் தமிழ்நாடு PMK செங்கோட்டையன் Thirumavalavan Seeman Sengottaiyan முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் Congress Edappadi Palaniswami வடகிழக்கு பருவமழை பாமக Tamilaga Vettri Kazhagam காங்கிரஸ் Nellai நெல்லை தமிழகம் வானிலை ஆய்வு மையம்