விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராப்பூசலில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
அதில் ஜல்லிக்காட்டு காளை கொம்பன் கடந்தாண்டு இறந்தது. தற்போது வெள்ளையன் என்ற காளையை வளர்த்து வந்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை அள்ளி குவித்த வெள்ளையன் காளை வயது முதிர்வின் காரணமாக நேற்று இறந்தது. பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களை திணறடித்த காளையாகும். இந்த செய்தியை கேட்ட விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்த காளைக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S