360 டிகிரி ப்ளேயர் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவிலியர்ஸ் ஓய்வை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் ஓய்வு முடிவு எடுத்தது எடுத்ததுதான் திரும்பி வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏ.பி.டிவிலியர்சுடன் ஆலோசனை நிறைவடைந்தது. அவர் ஓய்வை முடித்துக் கொள்ள விரும்பவில்லை, ஒருமுறை ஓய்வு அறிவித்து விட்டால் அவ்வளவுதான் அந்த முடிவை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.
2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்த போது நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் டேல்ஸ்டெய்ன் சொதப்பலால் இறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ். அப்போதிலிருந்தே மனமுடைந்த டிவில்லியர்ஸ் 2018-ல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2019 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே ஓய்வு அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து மே.இ.தீவுகள் பயணத்துக்கு தென் ஆப்பிரிக்கா இன்று அணியை அறிவிக்கையில் டெஸ்ட் அணிக்கு இடது கை தொடக்க வீரர் டீன் எல்கரை கேப்டனாக்கியுள்ளது, இவர் முதன்முதலாக தென் ஆப்பிரிக்கா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கு தெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப் ஸ்பின்னர் பிரணலன் சுப்ராயன் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் லிசாத் வில்லியம்ஸ் என்ற வீரரும் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுப்ராயன், ஷம்சி, கேஷவ் மகராஜ், ஜார்ஜ் லிண்டே ஆகிய ஸ்பின் பவுலர்கள் அணியில் உள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்குச் செல்கிறது தென் ஆப்பிரிக்க அணி.
இதோடு புதுமுகங்களான கைல் வெரினி, கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, மார்கோ ஜேன்சன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி செயிண்ட் லூசியாவுக்கு வருகிறது தென் ஆப்பிரிக்க அணி.
மே.இ.தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:
டீன் எல்கர் (கேப்டன்), தெம்பா பவுமா ( துணைக் கேப்டன்), டீ காக், சாரெல் எர்வீ, பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, அய்டன் மார்க்ரம், வான் டெர் ட்யூசன், வியான் முல்டர், ஆன்ரிச் நார்ட்டியே, கீகன் பீட்டர்சன், கேகிசோ ரபாடா, கைல் வெரினீ, ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ், பிரணலன் சுப்ராயன், மார்கோ ஜேன்சன்.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!