உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை குறித்து சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்பிஏ படித்துள்ள இவர், உலகின் முன்னணி தனியார் வங்கியில் உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பணிகளுக்கிடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார். இவரது தமிழ் பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
குறிப்பாக, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் பாரதி பாஸ்கர் - ராஜா ஆகியோரின் பேச்சுக்குதான் அதிக பாராட்டு கிடைக்கும். இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து சாலமன் பாப்பையா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். பாரதி பாஸ்கரின் உடல் நிலை தேறி வருவதாக சாலமன் பாப்பையா கூறியுள்ளார். உடல்நிலை முன்னேற்றத்துக்காக சில பயிற்சிகளை மேற்கொள்கிறார். பட்டிமன்றத்தில் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி முழு உடல் நலத்துடன் திரும்பிய உடன் அவர் பட்டிமன்றத்தில் பங்கேற்பார் எனவும் சாலமன் பாப்பையை தெரிவித்துள்ளார்.
22 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பாரதி பாஸ்கர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நலம் பழைய நிலைக்கு தேறி வருகிறது.
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!