திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்களாக ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார், தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 9 பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே திமுக சார்பில் சுபினா என்பவரை பேரூராட்சி தலைவராக திமுக அறிவித்தது. இன்று காலை திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. ஆனால் திமுகவின் சுபினாவுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. கமலா நேரு என்பவர் திமுக கூட்டணி சார்பில் கமலா நேரு என்பவர் தலைவராக்க முன்மொழிந்தனர்.
அதிமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவரானார்.
இந்த மறைமுக தேர்தலின்போது பாஜக கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தான் தலைவர் வேட்பாளர்கள் 9 ஓட்டுகள் பெற்றனர். இல்லாவிட்டால் எளிமையாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். குலுக்கல் முறையில்தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!