ஆடுகளத்தில் உயிரிழந்த கபடி வீரர்!

ஆடுகளத்தில் உயிரிழந்த கபடி வீரர்!

Views : 70

பண்ருட்டி அருகே ஆடுகளத்தில் கபடி வீரர் உயிரிழந்தார்.

பண்ருட்டி அடுத்த காடாம் புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் (21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றுவந்தார்.

பண்ருட்டியை அடுத்த மானடி குப்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடை பெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிரணியைச் சேர்ந்தவர்கள், அவரை பிடித்தபோது, கீழே விழுந்தார். மீண்டும் எழமுயற்சித்தபோது, எழ முடியாமல் மயங்கி விழுந்தார். சக கபடி வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரைபரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விமல்ராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபாடி போட்டியின் போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விமல்ராஜ் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கபாடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார். அவரது எதிர்பாராத மறைவால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது! விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!

2022-07-14 16:35:40 - 3 weeks ago
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி! அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்,

கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்!

2022-07-18 07:54:03 - 3 weeks ago
கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் தமிழநாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.

வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி!

2022-07-20 10:29:11 - 3 weeks ago
வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவி வகுப்பறைக்கு வருகிறார். வரும்போதே மிகவும் சோர்வாக இருக்கிறார். பின்னர் தனக்கான பெஞ்ச்சில் அமர்கிறார். கீழே குனிந்து ஏதோ செய்கிறார். பின்னர் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்குகிறார். இந்த காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி

தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலையாக மாறிய வரலாறு!

2022-08-03 04:23:57 - 1 week ago
தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலையாக மாறிய வரலாறு! ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் ஏராளமான கொங்கு அமைப்புகள் மரியாதை செலுத்தி வருகின்றன.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டிய இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம்