ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் ஏராளமான கொங்கு அமைப்புகள் மரியாதை செலுத்தி வருகின்றன.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டிய இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியினருக்கு 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மகனாகப் பிறந்தார் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்று சிறந்து விளங்கினார்.
கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி புரிந்ததால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்குச் சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாகச் சொல்' என்று கூறியதால் அன்று முதல் 'சின்னமலை' என்ற பெயர் பெற்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
திருக்கோவில்களுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தமிழ் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை மாபெரும் வெற்றி பெற்றார்.
தீரன் சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலை மற்றும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!