பாலிவுட்டில் தயாராகி வரும் பிரமாண்ட படம் பிரம்மாஸ்திரா : சிவபெருமானின் சக்திகளில் ஒன்றான அக்னி சக்தியை பெற்ற இக்கால இளைஞன் ஒருவனின் கதை.
இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மவுனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் பலர் நடித்து உள்ளனர். அயன் முகர்ஜி இயக்கி உள்ளார்.
ப்ரீதம் இசை அமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தில் இடம் பெறும் தேவா தேவா... என்ற பாடல் வெளியாகி டிரண்ட் ஆகியுள்ளது. படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் சக்தியை பெறும்போது இந்த பாடல் அதன் பின்னணியாக ஒலிக்க இருக்கிறது. இது ஒரு வகையான பக்தி பாடலும் ஆகும்.பாடல் பற்றி இசை அமைப்பாளர் ப்ரீதம் கூறியிருப்பதாவது: இந்த பாடலுக்கு நான் இசையமைக்கும்பொழுது ஒரு ஆன்மிக உணர்வு என்னுள் வந்தது.
'தேவா தேவா' மூலம், பாரம்பரிய மற்றும் பக்தி கூறுகளை முக்கியமாக வைத்து, இசையை நவீனப்படுத்தியுள்ளோம். இந்த ஆன்மிகப் பாடல் ஒரு உலக அனுபவத்தைத் தருகிறது. இது அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன். என்கிறார்.கொலவெறி, ரவுடி பேபி, ஊ சொல்றியா மாமா மாதிரியான பாடல்களை விட இதுபோன்ற ஆன்மிக பக்தி பாடல்கள் டிரண்ட் ஆவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!