அதிமுக கையை விட்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கமான ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றம் நிகழ்ந்தது. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையே இவர்கள் இருவரும் தங்களுக்குள் பனிப்போர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதன் எதிரொலியாக தன்னுடன் சேர்ந்து பயணித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுக்க முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
இவர்களின் துணையுடன் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்ததோடு நிற்காமல், பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி, எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விளக்கி கூறவும், மீண்டும் இறங்கி நியாயம் பெற்று தரவும் கோரி பாஜக மேலிடத்தின் கதவை ஓபிஎஸ் தட்டி இருக்கிறார்.
இதை சீரியசாகவே எடுத்துக்கொண்ட பாஜக மேலிடம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது‘நீங்கள் என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது. கட்சி என் பின்னால் இருக்கிறது. பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் என் பின்னால் உள்ளார்கள்’ என்று, சற்று கூலாக கூறி உள்ளார்.
இந்த உத்தரவை தடாலடியாக நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘இனி பாஜகவின் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள போவதில்லை’ என்று தெரிவித்து அதிரடியை அரங்கேற்றி உள்ளார்.
இதனால் டென்ஷன் ஆன பாஜக மேலிடம் சட்டத்மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எதிலும் எடப்பாடி கை ஓங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, ‘கட்சியை ஓபிஎஸ், சசிகலா வசம் ஒப்படைத்துவிட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறுங்கள்’ என்று மறைமுகமாக உத்தரவு போட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் காதை கடிக்கிறது.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: * தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும். * கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன். * அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். * அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால்
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!