ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!
அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே கழிவறையினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.
எதற்காக இருவர் அடுத்தடுத்து அமரும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர் பயன்படுத்தும் கழிவறைகளில் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என்றாலும் கூட கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓரே அறையில் இரு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பகிரவும்: