திராவிடம் என்றால் என்ன? கவிதை வரிகள்

திராவிடம் என்றால் என்ன? கவிதை வரிகள்

  செப்டம்பர் 23, 2022 | 01:09 am  |   views : 2203


❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?



திராவிடம்னா என்னவா ..?*❤️





🏴அட அற்பமே ...



Also read...  பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்


அங்கம் சிதைந்த சிற்பமே ...



சொல்கிறேன் கேள் ...





🏴அன்றொரு நாள் ...



நீ



அநாதையாய்த்



தெருவில்



நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...





அப்படி



2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த



உன்னை...





100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து



தலைவாரி விட்டதே ...



அதன் பெயர் தான்



"தம்பி" திராவிடம் ...





🏴சக்கிலியனைத்



தொட்டால் தீட்டு ....



சாணனைப்



பார்த்தாலே



தீட்டு ...



என்ற



வர்ணாசிரமத்தின் ...



சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...





*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....



அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...





🏴கம்பனில்லையா ...



வள்ளுவரில்லையா ...



என்று



சங்க காலத்தில் சரித்திரம்



தேடும் தரித்திரமே ...





🏴பனையேறியே செத்துப் போன உன்



படிக்காத பாட்டனை நினை ...





🏴பானை செய்தே உடைந்து போன உன்



தாத்தாவின் தகுதியை யோசி ...





🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...



நண்டோடு உண்டாடிய



கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?





🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....



பேனாவைக் கொடுத்தது யார்..?





🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...



விளக்கேற்ற சொன்னது யார் ....?





🏴வண்ணான் ...



அம்பைட்டையன் ....



என்ற வார்த்தைகளை எல்லாம் ...



வழக்கொழிக்கச் செய்தது யார் ...?





🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...



மொத்த தமிழனையும் ...



ஆரியன்



அழைத்தபோது ...





முதன்முதலில் ஆத்திரம்



கொண்டது யார்...?





அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...





🏴மராட்டியர்களிடமும் ...



நாயக்கர்களிடமும் ...



தோல்வியடைந்து



நிலத்தையும்



நாட்டையும் ...



இழந்தபோது



வராத ரோஷம் ...





🏴நம்பூதிரி



பார்ப்பணர்களால் ...



தன்தாய்மார்கள் ...



வரி செலுத்த வழியின்றி



வெற்று மார்போடு ...



வீதியில் அலைந்தபோது ...



வராத கோபம் ...





🏴நூற்றாண்டு திராவிடம் தந்த



சமூகநீதியால் ....



அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த



பொருளாதார வளத்தால் ...





🏴உடல் பருத்து...



கொழுப்பேறியபோது ...



திணவெடுத்து ...



மெல்ல மெல்ல



நக்கத் தொடங்கிய



Naய்களுக்கு ...





🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..





தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 7 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 1 day ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 day ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 day ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 2 days ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 5 days ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 5 days ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 6 days ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,