POLLING 📊 TN ELECTION 2026

 

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி!

3 years ago 30 செப்டம்பர் 2022 03:14 AM | views : 186
தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி 67 ஆபாச இணையதளத்தை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியது.

இந்த சட்டத்தின் படி, இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது. இதன்படி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாட்ஸ் ஆப்,யூடியூப் போன்ற கணக்குகளை மத்திய அரசு முடக்கிவருகிறது. இந்நிலையில், தற்போது 67 ஆபாச இணையதளங்களை முடக்கி மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையதளங்களையும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 4 ஆபாச இணையதளங்களையும் முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இணையதளங்கள் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விதிக்கும் விதமாகவும், ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2021 தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் படி, ஒரு நபரை முழு அல்லது அரை நிர்வாணமாகவோ, அவர்களை பாலியல் நோக்கில் தவறாக சித்தரிப்பதோ சட்டவிரோதமாகவும். அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU கனமழை எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் பாமக CONGRESS தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கைது சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழ்நாடு திருமாவளவன் கோவை INDIAN CRICKET TEAM சீமான் கொலை UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION தீபாவளி AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH COIMBATORE அமமுக வடகிழக்கு பருவமழை தென்காசி ASSEMBLY ELECTIONS தேவர் OPS EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI CSK மதுரை தூத்துக்குடி NORTHEAST MONSOON BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் வன்னியர் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை ஓபிஎஸ் விடுமுறை நடிகை SEEMAN அஜித்