மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அக்டோபர் 25-ந் தேதி இரவு 7 மணிக்கு பின்னரே பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரகணமானது அக்டோபர் 25-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இதனையடுத்து பெரும்பாலான கோவில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூரிய கிரகண நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவில், காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணிவரை மூடப்படும் என ஏற்கனவே தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
சூரிய கிரகண நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து கட்டண தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதாவது இலவச தரிசனத்துக்கு மட்டும் இரவு 7.30 மணிக்கு பின் அனுமதி வழங்கப்படும். அதேபோல் கிரகண நாளில் சமையல் நடைபெறாது என்பதால் அன்னதானமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன்
இதேபோல் சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் மூடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் 25-ந் தேதி - செவ்வாய் கிழமை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்.
கிரகண கால அபிஷேகம்
சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படுவதால் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை. சூரிய கிரகணத்தன்று மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மேல் நடை திறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிரகண கால அபிஷேகம் முடிவடைந்து சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். அன்றைய தினம் அதாவது சூரிய கிரகணம் நிகழும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்குப்பின் நடைபெறும்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் 2025-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ரொம்ப ஆர்வமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!