POLLING 📊 TN ELECTION 2026

 

யார் இந்த ரிஷி சுனக்..! அவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் உள்ளே..

3 years ago 25 அக்டோபர் 2022 07:45 AM | views : 180
பிரிட்டன் பிரதமர் என்ற பதவியை அலங்கரிக்க ஆளுங்கட்சியின் 100 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டும். அந்த வகையில் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவோடு அடுத்த பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், முதல் இந்து பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.





இவரது பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960களில் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அனௌஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ரிஷி சுனக்கிற்கு மிகவும் பிடிக்கும்.



அதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார். பகவத் கீதை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதையொட்டியே தனது மகள்களில் ஒருவருக்கு 'கிருஷ்ணா' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. யார்க்‌ஷைர் எம்.பியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற போது பகவத் கீதை மீது சத்ய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.



இதற்கு முன்பு எந்தவொரு எம்.பியும் பகவத் கீதையையும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. தனது நெருக்கடியான காலகட்டங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பகவத் கீதை தான் பெரிதும் உதவியதாக பலமுறை கூறியிருக்கிறார். டவுனிங் தெருவில் உள்ள தனது குடியிருப்பில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.





தனது இந்திய பாரம்பரியத்தையும், பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த கலாச்சாரத்தையும் ஒருபோதும் மறக்காதவர். அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் பெங்களூரு வந்து தனது மாமனார் நாராயணமூர்த்தியை பார்த்துவிட்டு செல்வார். இங்கிலாந்து நாட்டின் மிகவும் பணக்கார பிரதமர் ரிஷி சுனக் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கிட்டதட்ட 700 மில்லியன் பவுண்டிற்கு மேல் சொத்துகளை வைத்திருக்கிறார்.





ஒருபக்கம் பொருளாதார நெருக்கடியால் பிரிட்டன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டிருக்கின்றன. மறுபக்கம் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வைத்திருக்கிறார் ரிஷி சுனக். இந்த முரண்பாட்டை சரிசெய்து பிரிட்டனை மேம்படுத்தி காட்டுவாரா? நிதிநிலையை சீர்செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI ADMK MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் கனமழை பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி பாமக காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் கோவை CONGRESS கைது ரஜினிகாந்த் கொலை COIMBATORE தமிழ்நாடு INDIAN CRICKET TEAM திருமாவளவன் சீமான் இந்திய அணி தென்காசி வடகிழக்கு பருவமழை அமமுக தீபாவளி பிரதமர் மோடி AJITH PARLIAMENT ELECTION KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM OPS ASSEMBLY ELECTIONS தேவர் THIRUMAVALAVAN நெல்லை NELLAI பாலியல் தொல்லை ஓபிஎஸ் CSK MADURAI PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை NORTHEAST MONSOON கள்ளக்காதல் மதுரை SEEMAN வன்னியர் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி ELECTION COMMISSION அஜித்